• Feb 23 2025

மேக்னாவின் கதையை முடித்து நடு ரோட்டில் வீசிய ரவுடிகள்.?? சரஸ்வதி மீது விழுந்த பழி?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் தமிழும் சரஸ்வதியும். அதில், இன்றைய தினம் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.

அதன்படி மேக்னாவுக்கு தனது மாமா பற்றிய உண்மைகள் தெரிய வர, இறுதியில் அவரது மாமாவே மேக்னாவின் கதையை முடிக்குமாறு  ஆட்களை ரெடி பண்ணி அனுப்புகிறார்.

தனது மாமா அனுப்பிய ரவுடிகளிடம் இருந்து தப்பிக்க, மேக்னாவும் வேலைக்கார அம்மாவும் காரில்  உயிரைப் பிடித்துக் கொண்டு ஓடுகின்றனர்.

அந்த நேரத்தில் எங்கு போவது என்று தெரியாமல் மேக்னா, சரஸ்வதிக்கு போன் எடுத்து நடந்தவற்றை சொல்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து புது கம்பெனிக்கு போகுமாறு சரஸ்வதி சொல்ல,  மேக்னாவும் காரில் விழுந்து அடித்துக் கொண்டு புது கம்பெனிக்கு செல்லும் போது, அங்கே வந்த ரவுடிகள் அவர்கள் இருவரின் கதையையும் முடித்து விடுகிறார்கள்.

அந்த நேரத்தில், சரஸ்வதியும் அங்கு வர,  உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மேக்னாவின் வயிற்றில் இருந்து கத்தியை பிடுங்கி எடுக்கிறார்.

இதையடுத்து தொழிற்சாலை ஆட்களும் அங்கு வந்து பார்த்த போது, சரஸ்வதி தான் மேக்னாவின் உயிரை எடுத்து விட்டார் என்று பழியை தூக்கி அவர் மேலே போடுகின்றார்.  

எனவே பொறுத்து இருந்து பார்ப்போம், மேக்னா உயிர் பிழைப்பாரா? இல்லை சரஸ்வதி குற்றவாளியாக கைது செய்யப்படுவாரா? என்று...

Advertisement

Advertisement