• Jan 19 2025

ஸ்டார் படத்தை பார்த்தவர்கள் போன் பண்ணி அழுகிறார்கள்..! காதல் சுகுமார் பேட்டி

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பியார் பிரேமா காதல் என்ற படத்தை இயக்கியவர் தான் இயக்குனர் இளன். தற்போது நடிகர் கவின் நடிப்பில் ஸ்டார் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த படத்தில் அப்பாவாக நடிக்கும் லால், சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் ஊரை விட்டு ஓடி வந்து அதில் சாதிக்க முடியாமல் போகவே போட்டோகிராபராகிறார். தன்னுடைய ஆசையை எப்படியாவது மகன் மூலம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என மகனை நடிகராக்க பெருமுயற்சி பண்ணுகிறார். சிறுவயது முதலே மகனுக்கு நடிப்பில் ஆர்வம் காட்டுகிறார் . கவினும் அதற்கு ஏற்ற போல நடிப்பில் கலக்குகிறார்.

அந்த நேரத்தில் விபத்தில் சிக்கும் கவினுக்கு காயம் ஏற்பட அவரது காதலியும் விட்டுப் பிரிகிறார். இறுதியில் அவர் நடிகராக மாறினாரா? காதலில் வெற்றி பெற்றாரா?  என்பது தான் ஸ்டார் படத்தின் மீதி கதை.

முதல் பாதியில் சாக்லேட் பாயாகவும், இரண்டாம் பாதியில் சாதிக்கத் துடிக்கும் ஒரு இளைஞனாகவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பெற்றுள்ளார். டாடா படத்தைப் போலவே இந்த படமும் இவரது கேரியலில் ஒரு திறப்பு முனையை ஏற்படுத்தி உள்ளது.


இந்த நிலையில், இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த காதல் சுகுமார் பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் இந்த படம் தனது பயோபிக் போல உள்ளது என கூறியுள்ளார். அதன்படி அவர் மேலும் கூறுகையில்,


இந்த படத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்தத நினைச்சு நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஸ்டார் படம் வெளியாகும்  முன்பே பத்திரிகையாளருக்கு இந்த படம் போட்டு காட்டப்பட்டது. அவர்கள் எனக்கு போன் மூலம் வாழ்த்து தெரிவித்தார்கள்.

இதில் நடிக்குமாறு இயக்குனர் என்னை அழைத்த போது, அவரது வார்த்தை எனக்கு பிடித்தது. இயக்குனர்  சிறியவராக இருந்தாலும் உணர்வு பூர்வமாக விஷயத்தை சொல்வதில் திறமை சாலியாக இருக்கிறார்.

காதல் படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் வந்தது. ஆனாலும் அது சிலரின் சதியால் இல்லாமல் போனது. தற்போது ஸ்டார் படத்தை பார்த்த பலர் எனக்கு போன் பண்ணி அழுகின்றார்கள். அந்தப் படம் என்னோட பயோபிக் போலவே இருக்கின்றது என்று என காதல் சுகுமார் பேசியுள்ளார்.

Advertisement

Advertisement