• Dec 02 2024

விஜய், விஷாலை அடுத்து அரசியலில் களமிறங்கும் சூர்யா.. எத்தனை முதல்வர் வேட்பாளர்கள்?

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் ஏற்கனவே அரசியல் கட்சி தொடங்கி வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் அதே 2026 ஆம் ஆண்டு அரசியலில் களமிறங்க போவதாக நடிகர் விஷாலின் அறிவித்துள்ளார். ஏற்கனவே அரசியல் களத்தில்  கமல்ஹாசன், சீமான், சரத்குமார், உட்பட பல திரையுலக பிரபலங்கள் இருக்கும் நிலையில் அடுத்ததாக சூர்யாவும் அரசியல் களத்தில் குதிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் மு க ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, விஜய், விஷால், சீமான் என 6 முதல்வர் வேட்பாளர்கள் போட்டியிடுவதால் இது ஒரு வித்தியாசமான தேர்தலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய், விஷாலை அடுத்து சூர்யாவும் அரசியலில் களமிறங்க போவதாக கூறப்படுகிறது. சூர்யா தனது நற்பணி மன்றத்தை 60 மாவட்டங்களாக பிரிந்து செயல்பட்டு வருவதாகவும், அனைத்து மாவட்டங்களிலும் வார்டு வாரியாக நிர்வாகிகளை நியமனம் செய்து வருவதாகவும் தெரிகிறது.

இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது அரசியல் எதிர்கால திட்டமிடலை முன்வைத்து நற்பணி மன்றத்தை வலுப்படுத்துவதற்காக  சூர்யா நற்பணி இயக்கத் தலைமை செயல்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது .

ஏற்கனவே விழுப்புரம், கடலூர் கிழக்கு, கடலூர் தெற்கு, கடலூர் மேற்கு, புதுச்சேரி, மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில் அடுத்தடுத்து இன்னும் சில கூட்டங்கள் நடத்த திட்டமிடுவதால் சூர்யாவின் அரசியல் அறிவிப்பு விரைவில் வரும் என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement