• Jan 18 2025

‘தளபதி 69’ படத்திற்கு விஜய்யின் சம்பளம் ரூ.250 கோடியா? இஷ்டத்திற்கு அளந்துவிடும் இன்ஸ்டண்ட் பத்திரிகையாளர்கள்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 69’ திரைப்படத்திற்கு 250 கோடி ரூபாய் விஜய்க்கு சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாக இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் செய்திகள் கசிந்து வருகிறது.

விஜய் நடித்த ’லியோ’ திரைப்படத்திற்கு 150 கோடி ரூபாய் அவர் சம்பளம் வாங்கியதாகவும் தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் ’கோட்’ படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாகவும் கூறப்படும் நிலையில் ’தளபதி 69’ படத்திற்கு 250 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும் ஒரு செய்தி இணையத்தில் கசிந்து வருகிறது.

ஒரு மொபைல் போன் மற்றும் ஒரு ஜிபி இன்டர்நெட் இருந்தால் போதும், உடனே நாங்களும் பத்திரிகையாளர்கள் என்ற ரீதியில் பலர் தங்களுடைய கற்பனைகளை செய்தியாக பதிவு செய்து தங்களுக்கு பிடித்த நடிகர்கள் குறித்து பில்டப் செய்து வருவது கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது.  

ஒரு நடிகருக்கு எவ்வளவு சம்பளம் என்பது அந்த நடிகருக்கும் தயாரிப்பாளருக்கும் மட்டுமே தெரியும் ஒரு விஷயமாகும். நடிகரின் பிஏவுக்கு கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கும்போது ஒரு நடிகரின் சம்பளம் 150 கோடி, 200 கோடி, 250 கோடி என சமூக வலைதளங்களில் மொபைல் வைத்திருப்பவர்கள் எல்லாம் பத்திரிகையாளர்களாக மாறி போலி செய்திகளை வெளியிட்டு வருவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

குறிப்பாக விஜய் போன்ற நடிகர்களுக்கு 250 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க வாய்ப்பே இல்லை என்றும் அதிகபட்சமாக 80 முதல் 100 கோடி ரூபாய் தான் சம்பளம் கிடைக்கும் என்றும் ஆனால் ரசிகர்கள் தங்கள் விருப்பத்துக்குரிய நடிகரை புகழ்ந்து பேச வேண்டும் என்பதற்காக பல கோடிகளை பதிவு செய்து வருகின்றனர் என்றும் கூறப்பட்டு வருகிறது.

மொத்தத்தில் ஒரு நடிகர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது சாதாரண பொது மக்களுக்கும் ரசிகர்களுக்கும் தேவையில்லாத ஒரு விஷயம்.  அந்த நடிகரின் படம் நன்றாக இருந்தால் பார்த்து வாழ்த்து தெரிவித்துவிட்டு, நன்றாக இல்லை என்றால் விமர்சனம் செய்துவிட்டு கடந்து விடுவதே நல்லது என்றும் நடுநிலையாளர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement