• Jan 19 2025

இயக்குனராகிறார் சன் டிவி தொகுப்பாளர்.. பிக்பாஸ் நடிகை தான் நாயகியா?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பல ஆண்டுகள் தொகுப்பாளராக இருந்தவர் தற்போது இயக்குனர் ஆகியுள்ள நிலையில் அவர் தனது நீண்ட நாள் கனவு நனவாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சன் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் தொகுப்பாளர் ஆடம்ஸ். இவர் சில ஆண்டுகளாக இணை இயக்குனர், துணை இயக்குனர் பணிகளில் இருந்த நிலையில் தற்போது முதல் முறையாக ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் தொலைக்காட்சியில் உள்ள பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

பெண் கதாபாத்திரங்கள் அதிகமாக இருக்கும் இந்த படத்தில் இளைய தலைமுறை இளம் பெண்களின் வாழ்க்கை, அவர்களின் பார்வையில் காதல் ஆகியவற்றை நகைச்சுவையாகவும் அதே நேரத்தில் அழுத்தமாக ஜனரஞ்சக திரைப்படமாகவும் இந்த படத்தை ஆடம்ஸ் உருவாக்கி உள்ளார்.



இந்த படத்தில் பிக்பாஸ் நடிகை யாஷிகா ஆனந்த் முக்கிய வேடத்டில் நடிக்க மேலும் பிரணவி மனுகொண்டா, ஹேமந்த் மேனன், அக்ஷரா ராஜ், கலையரசன், , தம்பி ராமையா, ரோபோ சங்கர், கோவை சரளா, கருணாகரன், மாறன், ஸ்ரீமன், VTV கணேஷ், கௌசல்யா, ரெடின் கிங்ஸ்லி, நாஞ்சில் விஜயன், கார்த்திக் கருப்பு காளை, ஆகியோர்களும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் படமாக்கப்பட்ட நிலையில் கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என்றும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  மேலும் இந்த படத்தின் டீசர், ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விஜய் டிவியில் உள்ள பல பிரபலங்கள் திரையுலகில் நடிகர்களாகவும் இயக்குனர்களாகவும் பல்வேறு துறைகளில் ஜொலிப்பவராகவும் இருக்கும் நிலையில் சன் டிவியில் இருந்து திரையுலகிற்கு வருபவர்கள் வெகு அரிதாகவே உள்ளது. அந்த வகையில் ஆடம்ஸ் திரையுலகில் இயக்குனர் ஆகியிருப்பது சன் டிவியில் உள்ள அனைவருக்குமே பெருமையான ஒன்றாக கருதப்படுகிறது.

Advertisement

Advertisement