தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 69’ படத்தை பிரபல தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனமான டிடிவி என்ற நிறுவனம் தயாரிக்க இருந்ததாக கூறப்பட்ட நிலையில் திடீரென அந்த நிறுவனம் பின்வாங்கியதை அடுத்து இந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
தளபதி 69 படத்தை சன் பிக்சர்ஸ், ஏஜிஎஸ், லைக்கா உள்பட சில நிறுவனங்கள் தயாரிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டாலும் இது ஒரு முழுக்க முழுக்க அரசியல் படம் என்றும் பிரச்சார படம் என்பதால் எந்த நிறுவனமும் தயாரிக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனை அடுத்து தளபதி விஜய் அதிரடியாக தானே இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்திருப்பதாகவும் இந்த படத்திற்காக அவர் 350 கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
‘கோட்’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ரஷ்யாவில் இருந்து சென்னை திரும்பிய பின்னர் தனது புதிய தயாரிப்பு நிறுவனம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் அந்த நிறுவனம்தான் ’தளபதி 69’ படத்தை தயாரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அரசியல் கட்சி ஆரம்பித்தபோது இதே போன்று தான் ஒரு பிரச்சார திரைப்படத்தை தயாரித்தார். ’என் தமிழ் என் மக்கள்’ என்ற படம் சிவாஜி புரடொக்சன்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தற்போது விஜய்யும் தனது அரசியல் பிரச்சார படத்தை தானே தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!