• Apr 23 2026

’அரண்மனை 4’ ரிலீசுக்கு முன்பே இன்ப அதிர்ச்சி தரும் தமன்னா- ராஷிகண்ணா.. தரமான அப்டேட்..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

சுந்தர் சி, தமன்னா, ராஷிகண்ணா நடிப்பில் உருவான ’அரண்மனை 4’  திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் தமன்னா மற்றும் ராஷிகண்ணா பாடல் ஒன்று இருப்பதாகவும் இந்த பாடல் காட்சியில் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு கிளாமர் காண்பித்ததாகவும் கூறப்பட்டது.

சமீபத்தில் ஊடகம் ஒன்றில் தமன்னா, ராஷிகண்ணா கிளாமர் புகைப்படங்கள் வெளியான நிலையில் இந்த படத்திற்கும் குறிப்பாக இந்த பாடலை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் தமன்னா, ராஷிகண்ணா பாடல் வீடியோ வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர். மேலும் இந்த அறிவிப்பை குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

 ஏற்கனவே  ’அரண்மனை 4’திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கும் நிலையில் இந்த பாடலில், படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என்றும் என் கூறப்படுகிறது.

சுந்தர் சி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் தமன்னா, ராஷிகண்ணா, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா, யோகி பாபு, கேஎஸ் ரவிகுமார், விடிவி கணேஷ், டெல்லி கணேஷ், சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Advertisement

Advertisement