• Sep 21 2024

’தளபதி 69’ படத்தில் 23 வயது மலையாள நடிகை? 50 வயது விஜய்க்கு ஜோடியா?

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படமான ’தளபதி 69’ திரைப்படத்தில் 23 வயது மலையாள நடிகை ஒருவர் நாயகி ஆக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

விஜய் நடித்த ’கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் விஜய்யின் 69வது திரைப்படத்தை எச் வினோத் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது ’தளபதி 69’ படத்திற்கான விஜய்யின் போட்டோஷுட்  சமீபத்தில் எடுக்கப்பட்டதாகவும் இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமான கெட்டப்பில் விஜய் இந்த படத்தில் தோன்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது.



இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தேர்வு சமீப காலமாக நடைபெற்று வந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி இந்த படத்தில் நாயகியாக மமிதா பாஜூ நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படமான ’பிரேமலு’ என்ற படத்தில் நடித்தவர் மமிதா பாஜூ என்பதும் தமிழில் அவர் ஜிவி பிரகாஷ் உடன் ’ரிபெல்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

23 வயதான மமிதா பாஜூ, 50 வயதான விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறாரா? அல்லது படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறாரா? என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement