• May 20 2024

இவர் தேற மாட்டார்.. ‘தளபதி 69’ இயக்குனர் பட்டியலில் இருந்து வெற்றிமாறன் நீக்கம்.. விஜய் அதிரடி..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படமான 'தளபதி 69’ படத்தை இயக்கும் இயக்குனர்கள் பட்டியல் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருந்த வெற்றிமாறன் தற்போது நீக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘தளபதி 69’ திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ், அட்லி, வெற்றிமாறன், எச் வினோத் உள்பட சில இயக்குனர்கள் இயக்குவார்கள் என்றும் அனைவரிடமும் கதை கேட்ட விஜய் விரைவில் இயக்குனர் யார் என்பதை முடிவு செய்வார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வெற்றிமாறன் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. ’தளபதி 69’ திரைப்படத்தை ஒரு குறுகிய கால தயாரிப்பாக இருக்க வேண்டும் என்று விஜய் முடிவு செய்ததாகவும் அந்த படத்தை முடித்துவிட்டு அடுத்த கட்டமாக அவர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தனது கட்சியை வளர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.



குறுகிய கால தயாரிப்பு என்றால் அதற்கு வெற்றிமாறன் ஒத்துவர மாட்டார் என்றும் அவரிடம் ஒரு படம் சென்றால் குறைந்தது ஒரு வருடம் அதிகபட்ச 3 வருடம் எடுத்துக் கொள்வார் என்றும் அதனால் ’தளபதி 69’ படத்திற்கு அவர் செட்டாக மாட்டார் என்று அவரது பெயரை விஜய் நீக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போதைய நிலையில் ’தளபதி 69’ படத்தை தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அவரிடம் தான் தற்போது விஜய் குழுவினர் இறுதி கட்ட பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தை டிவிவி என்ற தெலுங்கு திரைப்பட நிறுவனம் தான் தயாரிக்க உள்ள நிலையில் தெலுங்கு இயக்குனர் இந்த படத்தை இயக்குவார் என்று கூறப்படுவதால் தமிழ் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

Advertisement

Advertisement