• Jan 19 2025

ஆரம்பத்தில் கெஞ்சிய விமர்சகர்கள் இப்போது மிரட்டுகிறார்கள்.. தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி தகவல்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆன்லைன் விமர்சனம் செய்பவர்கள் தயாரிப்பாளரிடம் பாசிட்டிவாக விமர்சனம் செய்ய பணம் கேட்டு கெஞ்சியதாகவும் ஆனால் தற்போது மிரட்டி பணம் பறிப்பதாகவும் ஒரு சில தயாரிப்பாளர்கள் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு போன் மற்றும் ஒரு யூடியூப் அக்கவுண்ட் இருந்தால் போதும், நாங்களும் விமர்சகர்கள் தான் என்று தற்போது திரைப்படங்களை விமர்சனம் செய்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக லட்சக்கணக்கான, மில்லியன் கணக்கான பாலோர்கள் வைத்திருப்பவர்கள் ஒரு திரைப்படத்தை பாசிட்டிவாக வசனம் செய்தால் அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்தி தற்போது யூடியூப்-இல் அதிக ஃபாலோயர்கள் வைத்திருக்கும் விமர்சகர்கள் தயாரிப்பாளர்களை மிரட்டி பணம் பறித்து வருவதாகவும் பணம் கொடுக்க மறுத்தால் வேண்டுமென்றே அவர்களது படத்தை நெகட்டிவ் ஆக விமர்சனம் செய்து படத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கூறிய போது ஆரம்ப காலகட்டத்தில் உங்கள் படத்திற்கு நாங்கள் பாசிட்டிவாக விமர்சனம் செய்து புரமோஷன் செய்கிறோம் என்று எங்களிடம் கெஞ்சி ஒரு சில ஆயிரங்களை மட்டும் பெற்று செல்வார்கள் என்றும் ஆனால் தற்போது லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள் என்றும் பணம் கொடுக்கவில்லை என்றால் நெகட்டிவ் ஆக விமர்சனம் போடுவோம் என்று கூறுகிறார்கள் என்றும் இந்த போக்கு திரை உலகிற்கு பெரும் ஆபத்தாக முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

விமர்சகர்கள் என்ற போர்வையில் தற்போது இதை ஒரு தொழிலாகவே வைத்துக் கொண்டிருக்கும் நபர்கள் மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது. ஏற்கனவே சமீபத்தில் தன்னுடைய படத்தை பணம் கொடுக்கவில்லை என்பதற்காக மோசமாக விமர்சனம் செய்தார் என பாலிவுட் நடிகர் வித்யூத் ஜமால் ஒரு விமர்சகரின் பெயரை குறிப்பிட்டு தனது சமூக வலைத்தளத்தில் குற்றம் சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement