• May 20 2024

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள “O2” திரைப்படத்தின் டீசர் ரிலீஸ்- எப்படி இருக்கு என்று பாருங்க

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக விளங்கும் நயன்தாரா நடிப்பில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் காத்துவாக்கில ரெண்டு காதல். இதனைத் தொடர்ந்து தற்பொழுது 02 என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்தத் திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை டிரீம் வாரியர்ஸ் தயாரித்துள்ளது.

இந்த படத்தை இயக்குநர் வெங்கட்பிரபுவின் உதவியாளர் ஜி எஸ் விக்னேஷ் என்பவர் எழுதி இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் கதையை பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் கதைப்படி ”விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் மாட்டிக்கொள்கிறாள்.

நுரையீரல் பிரச்சனைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை பேருந்தில் சகபயணிகள் குறிவைக்க தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதைப் பரபரப்பாகச் சொல்லும் படம் தான் “O2”. தமிழ்நாடு , கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.” என சொல்லப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஒரு முழு பேருந்தும் மண்ணுக்குள் புதைந்துவிட, அதில் இருக்கும் பயணிகள் நிலை என்ன ஆனது என்பதை சொல்லும் விதமாக டீசர் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/XNvSpgoJYqg

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement