• May 13 2024

முக்கியமான நாளில் சோகமான பதிவு போட்ட அருண்ராஜா காமராஜ்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர் தான் அருண்ராஜா காமராஜ்.மேலும் இவர் “கனா” படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அவரின் நண்பரான நடிகர் சிவகார்த்திகேயன் இந்தப்படத்தை தயாரித்திருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் வெளியான இந்த படம் பெண்கள் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி இருந்தது.

இயக்குeராக அவதாரம் எடுத்த அருண்ராஜா காமராஜ் அடுத்தடுத்து சினிமாவில் பல விஷயங்கள் செய்ய தயாராகும் போது தான் அவரது சொந்த வாழ்க்கையில் ஒரு சோகமான விஷயம் நடந்தது.அது அவருக்கு மட்டும் அல்ல அவரது ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது.

கொரோனா முதல், இரண்டாம் அலைகள் எத்தனையோ கோடி கணக்கான மக்களின் உயிரை பறித்தது. தமிழ் சினிமாவும் பல பிரபலங்களின் இறப்பை கண்டது. அப்படி அருண்ராஜா காமராஜும் தனது மனைவி சிந்துஜாவை கொரோனா தொற்று நோய் தாக்கத்தால் இழந்தார்.

எனினும் தற்போது அவரது மனைவி இறந்து 1 வருடம் ஆன நிலையில் தனது மனைவி நினைத்து எமோஷ்னல் பதிவு ஒன்று போட்டுள்ளார்.

மேலும் அதைப்பார்த்த ரசிகர்கள் பிரபலங்கள் தங்களது வருத்தத்தையும் தெரிவித்து வருகிறார்கள்.

https://www.youtube.com/embed/XNvSpgoJYqg

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement