• May 20 2024

விக்ரம் படக்குழுவினருடன் நிற்கும் சூர்யா- தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட லோகேஷ் கனகராஜ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம். இந்தத் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகிய இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் தான் வெளியாகி மிகவும் வைரலானது.

இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யாவும் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறார் என ரசிகர்கள் சந்தேகித்து வந்த நிலையில் இது உண்மை தான் என்ற விஷயத்தை லோகேஷ் கனகராஜ் இசை வெளியீட்டு விழா மேடையில் அறிவித்தார்

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக உள்ளது இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றும் வருகின்றது.

இந்த நிலையில் விக்ரம் பட குழுவினருடன் சூர்யா இருக்கும் புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement