• Jan 19 2025

நான் உயிர் வாழ மாட்டேன்னு சொல்லிட்டாங்க.. சீரியல் நடிகை வீட்டில் நடந்த சோகம்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் நடிகை அஸ்விதா ஸ்ரீதாஸ். இவரது பூர்வீகம் கேரளாவாக இருந்தாலும் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். இவரது அப்பா புரொடக்ஷன் மேனேஜராக இருந்துள்ளதோடு, இவரது அம்மா சீரியல் நடிகையாக இருந்துள்ளார். அஸ்விதாவும் மூன்று வயதிலேயே நடிப்பதற்கு வந்துள்ளார்.

முதன்முதலாக அப்பா அம்மா என்ற சீரியல்தான் அறிமுகம் ஆனார். இதே தொடர்ந்து கனா காணும் காலங்கள், தமிழ் மொழி பிஏ, நாம் இருவர் நமக்கு இருவர், தமிழும் சரஸ்வதியும், சொந்த பந்தம், கல்யாண பரிசு உட்பட பல சீரியல்களில் நடித்துள்ளார்.


2015 ஆம் ஆண்டு கடல் கடந்த காவியம் என்ற படத்திலும் நடித்துள்ளார். அதற்கு பின் சம்டைம்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் தெகிடி, திருமணம் என்னும் நிக்கா, சில நிமிடங்களில், என்னை அறிந்தால், ஆறாவது சினம்,  கொரில்லா, வனமகன் போன்ற பல படங்களிலும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், அண்மையில் அவர் டிவி நிகழ்ச்சி ஒன்றில்   அளித்த பேட்டியில், தனக்கு 23 வது வயதில் நடந்த விபத்தில் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு பழைய நினைவுகள் எல்லாம் மறந்து போச்சு. இனி நடிக்கவே முடியாது உயிர் வாழவே முடியாது பத்து சதவீதம் தான் வாய்ப்புன்னு சொன்னாங்க. ஆனா ஒரு மாதத்திலேயே கேமரா முன்னாடி வந்து நின்றேன் என்று தனது கசப்பான அனுபவத்தை பகிர்ந்து இருந்தார்.

Advertisement

Advertisement