• Jan 15 2025

மறைந்த முக்கிய தயாரிப்பாளர்! சோகத்தில் திரையுலகம்! அஞ்சலி செலுத்திய சூர்யா!

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

ராஜகாளியம்மன் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் ‘பூக்களை பறிக்காதீர்கள்’, ‘பூ மழை பொழியுது’, ‘இனிய உறவு பூத்தது’, ‘என் தங்கச்சி படிச்சவ’, ‘பிள்ளைக்காக’, ‘எங்க அண்ணன் வரட்டும்’, போன்ற பல திரைப்படங்களை தயாரித்த முன்னணி திரைப்பட தயாரிப்பாளர் மோகன் நடராஜன் காலமானார். 


தயாரிப்பாளராக மட்டுமன்றி ‘மகாநதி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் வில்லனாகவும் நடித்திருந்தார். இன்று (செப்.4) காலை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 71. அவருடைய மறைவுக்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். 


கன்னடத்தில் ‘ரவுடி எம்.எல்.ஏ’ மற்றும் ‘சினேகா’ ஆகிய படங்களை தயாரித்துள்ளார். விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றிகரமாக படங்களை தயாரித்து வெளியிட்டவர் மோகன் நடராஜன் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் பூதவுடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் நடிகர் சூர்யா அவர்களும் அஞ்சலி செலுத்த சென்றுள்ளார். 


Advertisement

Advertisement