• Sep 20 2024

பிரபல இயக்குநருடன் கைகோர்க்கும் சூர்யா-வெளியானது சூப்பர் அப்டேட்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு வித்தியாசமான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து முன்னணியில் இருப்பவர் தான் நடிகர் சூர்யா.

சூர்யா விக்ரம் படத்தில் ரோலக்ஸ் ரோலில் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றி இருந்தாலும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தார். அடுத்து பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

அடுத்து அவர் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கிறார். அத்தோடு அது மட்டுமின்றி சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சூர்யா நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அஞ்சான். லிங்குசாமி இயக்கிய இப்படத்தில் கதாநாயகியாக சமந்தா நடித்திருந்தார்.

அத்தோடு மனோஜ் பாஜ்பாய் வித்யூத் ஜாம்வால், சூரி, என பலரும் இப்படத்தில் நடித்திருந்தார்கள். கேங்ஸ்டர் கதைக்களத்தில் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை.

இந்நிலையில், தற்போது மீண்டும் இந்த அஞ்சான் கூட்டணி உருவாகவுள்ளதாம். ஆம், மீண்டும் சூர்யா மற்றும் லிங்குசாமி இணைந்து படம் பண்ணப்போவதாக தகவல் கசிந்துள்ளது.

மேலும் இப்படத்தின் ஒன் லைன் கூட சூர்யா கேட்டுள்ளாராம். விரைவில் இப்படத்தின் முழு கதையையும் கேட்டபின், இருவரும் இணைய பெரிதும் வாய்ப்புகள் இருக்கும் என கூறப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement