• May 22 2024

ரன்பீர் கபூர் கேரக்டரில் நடிக்க சூர்யா தான் வேணும்! சூப்பர் சான்ஸ் கொடுத்த பிரபல இயக்குநர்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பாலிவூட்டில் பிரபல நடிகராக காணப்படும் ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அனிமல். இந்தப் படத்தை இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கியுள்ளார்.

கடந்த ஆண்டின் இறுதியில் வெளியான இந்த திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி கிட்டத்தட்ட 1000 கோடி வசூலில் சாதனையும் படைத்திருந்தது.

இந்த நிலையில், பாலிவூட்டில் சாதனை படைத்த அனிமல் படத்தின் தமிழ் பதிப்பு குறித்து பிரபல இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா பேட்டியொன்று  வழங்கி உள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில், அனிமல் படத்தின் தமிழ் பதிப்பில் ரன்பீர் கபூர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் சூர்யா தான் எனது முதல் தேர்வாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.


சமீபத்தில் இடம்பெற்ற விழா ஒன்றில் இந்த விடயத்தை சந்தீப் ரெட்டி வாங்கா கூறிய நிலையில், அங்கிருந்த ரசிகர்கள் கைகளை தட்டி தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்களாம். மேலும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, அனிமல் படம் வசூல் ரீதியில் 1000 கோடி ரூபாய் வரையில் வசூலித்து சாதனை படைத்த போதிலும்,  விமர்சன ரீதியில் கடுமையாக கழுவி ஊற்றப்பட்டிருந்தது. இதில் நடித்த ராஷ்மிகா மந்தனாவுக்கும் எதிர்ப்புகள் கிளம்பி இருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement