• Sep 20 2024

மகள் ஐஸ்வர்யா உடன் திருப்பதி தரிசனம் செய்தார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

ரஜினிகாந்த் என்ற திரையரங்கப் பெயர் கொண்ட ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பெரும்பான்மையாக தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பவர். 


பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

1973 ஆம் ஆண்டில் சென்னைத் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு நடிப்பிற்கான பட்டயம் பெற்றார்.  அடுத்து இவரது நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க ஜெயிலர் படம் உருவாகி வருகின்றது.


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை சாமி தரிசனம் செய்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று இரவு திருப்பதிக்கு வந்தார். அப்போது அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


இதையடுத்து இன்று அதிகாலை ரஜினிகாந்த், தனது மகள் ஐஸ்வர்யா உடன் சேர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். 



Advertisement

Advertisement