• Sep 20 2024

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 3 இல் வெளியான திரைப்படம் விக்ரம்.

இந்தத் திரைப்படம் தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ,ஹிந்தி போன்ற ஐந்து மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக வெளியானது

இப்படத்தில், விஜய் சேதுபதி, பஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம் மற்றும் கௌரவ தோற்றத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தனர்.

எங்கு திரும்பினாலும் விக்ரம் படத்தை பற்றிய பேச்சுதான்.இதுவரை இந்த படம் ரூ.500 கோடியை வசூலித்துள்ளது. இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் வெகுவாக பலரால் பாராட்டப்பட்டது.

நாளை இந்த படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. இந்நிலையில் தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள விக்ரம் படத்தின் இசையமைப்பாளர் அனிருத், இன்று மாலை விக்ரம் படத்தின் பின்னணி இசை தொகுப்புகள் வெளியிடப்படுவதாக அறிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement