• May 20 2024

நடிகராக அறிமுகமாகும் சன்னி லியோன் பட இயக்குநர்…வெளியானது சூப்பர் அப்டேட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் சில படங்கள் இயக்கி தனக்கென ஒரு இடத்தை படித்தவர் தான் இயக்குநர் V.C. வடிவுடையான்.

தம்பி வெட்டோத்தி சுந்தரம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள இயக்கநர் வடிவுடையான் நடிகை சன்னி லியோன் நடிக்கும் வீரமாதேவி படத்தை இயக்கி வருகிறார்.

மேலும் இந்த படத்தை அடுத்து அவரே கதாநாயகனாக நடிக்கும் ‘நாகபைரவா’ படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக ஜீவன், யாஷிகா ஆனந்த், ரித்திகா சென் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் மல்லிகா ஷெராவத் நடித்துள்ள " பாம்பாட்டம் " படத்தை இயக்கிய கையோடு இயக்குநர் V.C. வடிவுடையான் தனது அடுத்த படத்தின் வேலைகளை துவங்கியுள்ளார்.

நாகபைரவா படம் 1970 காலகட்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ஹாரர் திரில்லர் கலந்து இந்த கதையை உருவாக்கி உள்ளதாக கூறப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement