பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, பாக்கியா செழியனைப் பார்த்து நிதீஷ் ஜெயிலில இருந்து வந்திட்டான் என்று சொல்லுறார். அதைக் கேட்ட ஈஸ்வரி எப்புடி வெளியில வந்தான் தப்பு பண்ணேல என்று சொல்லி விட்டுட்டாங்களா என்று கேட்கிறார். அதுக்கு பாக்கியா அப்புடி எல்லாம் இல்ல அத்த ஜாமீனில வந்திருக்கான் என்று சொல்லுறார். பின் இனியா office-ற்கும் நிதீஷ் வந்தவன் என்று சொல்லுறார்.
அதைக் கேட்ட செழியன் அங்கயும் வந்து ஏதாவது கத்தினவனா என்று கேட்கிறார். அதுக்கு இனியா நான் அங்க அவரைப் பார்க்கவே இல்ல என்று சொல்லுறார். இதனை அடுத்து பாக்கியா நிதீஷ் வேற எந்த இடத்திலயும் தொந்தரவு செய்யாமல் இருக்க என்ன பண்ணணுமோ அதை செய்வோம் என்கிறார். இதனை அடுத்து எழில் நிதீஷை அடிப்பதற்காக வீட்ட இருந்து கிளம்புறார்.
பின் கோபி தான் சுதாகர் வீட்ட போய் கதைக்கிறன் என்கிறார். அப்ப எழில் தானும் அங்க வந்து கதைக்கிறன் என்கிறார். இதனை அடுத்து எழில் இனியாவைக் கூப்பிட்டு நிதீஷ் விஷயத்தை ஏன் என்கிட்ட மறைச்ச என்று கேட்கிறார். பின் ரெண்டு பெரும் கொஞ்ச நேரம் கதைச்சுக் கொண்டிருக்கிறார்கள். அப்ப இனியா இந்த கல்யாணம் நடந்தது என்றதையே நான் மறக்கணும் என்கிறார்.
பின் சுதாகர் நிதீஷை திருத்தவே முடியாது என்று சொல்லுறார். அந்த நேரம் பார்த்து கோபி அங்க போய் நிற்கிறார். இதனை அடுத்து எழில் நிதீஷை போட்டு அடிக்கிறார். அப்ப சுதாகர் கோபியப் பார்த்து உங்கட பசங்க ரொம்ப தப்பா நடந்துக்கிறாங்க என்று சொல்லுறார். அதனைத் தொடர்ந்து சுதாகர் பாக்கியாவோட ரெஸ்டாரெண்டுக்குப் போய் பொண்ண பெத்தவங்க மாதிரி பொறுமையா பேச தெரியாதா என்று கேட்கிறார். அப்ப கவுன்சிலர் வந்து இந்த ஆள் என்ன பிரச்சனை பண்ணுறார் என்று கேட்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!