அண்மையில் தயாரிப்பாளர் சங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் சார்பில் வெளியான பத்திரிகை செய்தி திரைத்துறையில் பெரும் பேசுபொருளானது.குறித்த அறிக்கையில் நடிகர் தனுஷை வைத்து படமெடுக்க முன்வருபவர்கள் தயாரிப்பாளர் சங்கத்திடம் கலந்து ஆலோசித்து விட்டு அதற்குப் பிறகு படத்தை உறுதி செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தனுஷ் ரசிகர்கள் மற்றும் மக்கள் மனதில் பெரும் கேள்வியை உண்டுபண்ணியது.
தனுஷ் நிறைய தயாரிப்பாளர்களிடம் பணத்தை முற்பணமாகபெற்றுவிட்டு படத்தை முடித்துக் கொடுக்கவில்லை என கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தயாரிப்பாளர் சங்கம் சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் இத் தீர்மானத்திற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்திருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "எங்களிடம் கலந்தாலோசிக்காமல் தீர்மானம் நிறைவேற்றி, அதை பத்திரிகை செய்தியாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டு இருப்பதை தொன்மையான, பாரம்பரியமிக்க தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டிக்கிறது.
திரைத்துறையின் நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காண முயற்சி எடுக்கும்போது, திரைப்படங்களில் மிக பிரதான பங்காற்றும் எங்கள் தென்னிந்திய நடிகர் சங்கத்தை ஆலோசிக்காமல், ஆயிரக்கணக்கான நடிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வுரிமையை பறிக்கும் விதமாக, 01.11.2024 முதல் படப்பிடிப்புகளை முழுமையாக நிறுத்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றிருப்பது பெரும் கண்டனத்துக்குரியது." என குறிப்பிடப்பட்டுள்ளது.
Listen News!