• Apr 28 2024

சிவகார்த்திகேயனுக்கு தங்கையாகும் விஜய்டிவி பிரபலம் - அடடே இவர் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் வந்திருக்கின்றாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் தான் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய டான் மற்றும் டாக்டர் ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால் இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது அதிகரித்துள்ளது.

டான் மற்றும் டாக்டர் ஆகிய திரைப்படங்கள் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது. மேலும் அப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ப்ரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வந்தார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் சமீபத்தில் மாவீரன் திரைப்படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி தற்போது ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக யார் நடிப்பது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய் டிவி-ன் KPY நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் தான் மோனிசா இவர் மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் பரவி வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement