• Apr 27 2024

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை கங்கனா ரணாவத்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் முன்னணி நடிகையாக மட்டுமல்லாது சர்ச்சைக்குரிய நடிகையாகவும் வலம் வருபவர் தான் கங்கனா ரனாவத். இவர் தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். ியலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி படத்திலும் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுதும் பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் லாக் அப் என்னும் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகின்றார்.

இது தவிர சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களைப் பதிவிட்டு வருவதோடு சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை கங்கனா ரனாவத்துக்கு திடீரென டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement