• May 20 2024

4 நாளிலும் செம வசூல் வேட்டை நடத்திய சிவகார்த்திகேயனின் டான்- வெளியானது முழு விபரம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13ஆம் திகதி வெளியாகியுள்ள திரைப்படம் தான் டான். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இத்திரைப்படம் வெளியாகியது.

இப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்க இப் படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத்.அத்தோடு இதில் எஸ்.ஜே. சூர்யா ,சமுத்திரக்கனி, பிரியங்கா மோகன் ,குக்வித்கோமாளி சிவாங்கி என பலரும் நடித்து அசத்தி உள்ளார்கள்.

கலகலப்பாக செல்லும் கதைக்களத்திற்கு இடையே சென்டிமென்ட் காட்சிகளை வைத்து இயக்குநர் மக்களை அழ வைத்துள்ளார்.

மேலும் வழக்கம் போல் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் படத்தை பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள், நாளுக்கு நாள் படத்தின் வசூலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ரூ. 40 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் ரூ. 33 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

அத்தோடு நாளுக்கு நாள் படத்தின் வசூல் அதிகரித்து வரும் நிலையில் நேற்றும் தமிழகத்தில் நல்ல கலெக்ஷன் என்கின்றனர். 4 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே படம் ரூ. 35 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

https://www.youtube.com/embed/kDpbkFdEuYc

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement