• Apr 28 2024

தம்பியோடு மோதிய சிவகார்த்திகேயன்... ஆனாலும் வாழ்த்து தெரிவித்த அண்ணன்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணிக் கதாநாயகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். கடந்த வருடம் 'டாக்டர்',  சில மாதங்களுக்கு முன்னர் 'டான்' என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து கெத்து காட்டியிருந்தார் நம்ம சிவகார்த்திகேயன். 


அதனைத் தொடர்ந்து இவர் நடித்துள்ள 'பிரின்ஸ்' திரைப்படம் ஆனது தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அனுதீப் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் மரியா, சத்யராஜ், ராகுல் தாத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம், சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக தெரிகிறது. ஏனெனில் படத்தில் கதையே இல்லையென்றும் சும்மா ஜாலியாக இருப்பதாகவும் ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர்.


சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்துடன் இணைந்து கார்த்தியின் சர்தாரும் இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பிஎஸ் மித்ரன் இயக்கியுள்ள சர்தார், ஆக்சன் ஜானரில் ஸ்பை திரில்லர் படமாக உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் வெற்றிபெற பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில் நடிகர் சூர்யாவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள சூர்யா "சிவகார்த்திகேயன், அனுதீப், தமன் உட்பட பிரின்ஸ் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள், ராக் ஆன்" எனக் குறிப்பிட்டு போஸ்ட் போட்டுள்ளார். சூர்யாவின் இந்த ட்விட்டர் பதிவை நம்ம சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


அத்தோடு சிவகார்த்திகேயனை வாழ்த்திய கையோடு, தனது தம்பியான கார்த்திக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார் சூர்யா. அதாவது "சர்தார் படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்து வருவதை பார்க்க மகிழ்ச்சியாக இருப்பதாகவும், படம் வெற்றி பெற வாழ்த்து" என்றும் சூர்யா பதிவு செய்துள்ளார். 


இவ்வாறாக சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்திற்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு, அப்படியே தம்பி கார்த்தியின் மனசையும் குளிர வைத்துள்ள சூர்யாவை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement