• May 14 2024

திரில்லர் படத்தில் மெயின் ரோலில் நடிக்கும் ஸ்ருதிஹாசன்! என்ன படம் தெரியுமா?

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் ஒரு புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். மேலும் இவர் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். அதுமட்டுமல்லாமல் இவரின் மாறுபட்ட வேடங்களைக் கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார்.


மேலும் கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த நடிகர் என்ற முறையில் 4 தேசிய விருதுகள் வென்றார். அதுமட்டுமல்லாமல் 19 பிலிம்பேர் விருதுகள் உள்ளடங்கலாக பல இந்திய விருதுகளை வென்றுள்ளார்.


மேலும்  களத்தூர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல வெற்றி திரைப்படங்கள் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதுமட்டுமல்லாமல் கமல்ஹாசன் தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.


இந்நிலையில் கமல்ஹாசன்க்கு திருமணம் ஆகி 2 மகள்கள் உள்ளனர். அதில் ஒருவர் தான் ஸ்ருதிஹாசன் இவர் தமிழ், ஹிந்தி படங்களை தாண்டி தற்போது ஹாலிவுட்திலும் கால்பதிக்க இருக்கிறார். தற்போது Daphne Schmon இயக்கி வரும் 'The Eye' என்ற சைக்காலஜிகல் திரில்லர் படத்தில் ஸ்ருதி மெயின் ரோலில் நடிக்கிறார்.


மேலும் புகழ் நடிகர் மார்க் ரௌலி இதில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் ஸ்ருதிஹாசன் இந்த படம் பற்றிய அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். 

Advertisement

Advertisement

Advertisement