• Jan 15 2025

மகனின் பிறந்தநாள்... கியூட் போட்டோவை வெளியிட்ட சிவகார்த்திகேயன்... வைரலாகும் புகைப்படம்

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகனின் பிறந்தநாளை முன்னிட்டு தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில்  ஒரு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK 23 படத்தின் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நடந்து வருகின்றனர்.

Sivakarthikeyan shares latest pic of his son Gugan in 'Baasha' mode - Tamil  News - IndiaGlitz.com

படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்து வர வில்லனாக பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் நடிக்கிறார். அண்மையில் இப்படத்தின் கதை அருமையாக இருந்ததாகவும் துப்பாக்கி படத்திற்கு பிறகு முருகதாஸுடன் இணைவது மகிழ்ச்சி என வில்லன் நடிகர் வித்யூத் கூறியிருந்தார்.


பட அப்டேட்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாவில் தனது மகனின் பிறந்தநாளை முன்னிட்டு கியூட்டான புகைப்படம் ஒன்று பதிவிட்டு '' ஹாப்பி பர்த்டே குகன் லவ் யு '' என குறிப்பிட்டுள்ளார். இந்த அழகிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement