• Jan 18 2025

தியேட்டரில் ஒன்றாக படத்தை பார்த்து ரசித்த சீமான் மற்றும் கமல்... வைரலாகும் புகைப்படம்...

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

நடிகர் கமலஹாசனின் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்போடு இருந்த இந்தியன் 2 திரைப்படம் இன்று ரிலீசானது. இந்த திரைப்படத்தினை பார்வையிட ஏராளமான நடிகர்கள் வருகை தந்திருந்தனர். இந்நிலையில் நடிகர் கமலஹாசனுடன் , சீமான் அவர்களும் ஒன்றாக இருந்து திரைப்படத்தினை பார்வையிட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

Indian 2: First Single of Kamal Haasan's Movie To Release on THIS Date,  Shankar's Film To Hit Theatres on July 12 | 🎥 LatestLYஇயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படம் இன்று திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன், சித்தார்த், போபி சிம்ஹா, விவேக் என பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். 28 வருடங்கள் கழித்து இன்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. 


இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் நடிகர் கமலஹாசன் அவர்களும் அருகில் இருந்து இன்று வெளியான இந்தியன் 2 திரைப்படத்தினை பார்வையிட்டுள்ளனர் . இவர்கள் ஒன்றாக யிருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement