• Apr 28 2024

யாருமே பார்த்திராத சிவாஜி கணேஷன் புகைப்படம்…பெண்ணா..?ஆணா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சாதாரண மக்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அனைவராலும் கொண்டாடப்பட்ட ஒரு மகானே நடிகர் சிவாஜி கணேசன். இவர் 'பராசக்தி' என்ற படத்தின் மூலமாகவே திரையுலகில் காலடி எடுத்து வைத்திருக்கின்றார். விதவிதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் வேறுபட்ட வடிவங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்துவது இவரின் தனித் திறமையாகும்.

இவரின் நல்ல குரல்வளம், தெளிவான மற்றும் உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவற்றிற்கு பல ரசிகர்களும் அடிமை என்று கூறலாம். இவர் தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளிலும் நடித்திருக்கின்றார். இவரின் நடிப்பில் வெளியாகிய படங்கள் ஏறத்தாள 288 இற்கு மேற்பட்டவையாகும்.

இவரின் நடிப்பை பாராட்டி 'நடிகர் திலகம், நடிகர் சக்கரவர்த்தி' எனப் பலரும் சிறப்பாக போற்றி வருகின்றனர். இவர் வென்ற விருதுகளோ ஏராளம். இவ்வாறாக பல படங்களின் வாயிலாக தனது திறமையை நிலை நாட்டி வந்த சிவாஜி கணேசன் அரசியல் வாழ்க்கை, சமூக நற்பணிகள் என்பவற்றிலும் ஈடுபாடு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மனித வாழ்க்கையை பொறுத்த வரையில் இந்த மண்ணுலக வாழ்க்கையை விட்டு மறைந்ததும் பலரும் அவர்களை மறந்து விடுவார்கள். ஆனால் மண்ணை விட்டு மறைந்தும் இன்று வரை பலரின் மனங்களில் வாழ்ந்து வருகின்ற மகான் என்றால் அது நம்ம சிவாஜி கணேசன் தான்.

இந்த நிலையில் நம்ம நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் இவர் பெண் வேடத்தில் தோற்றமளிக்கின்றார். சிவாஜி கணேசனை எப்போதுமே ஹீரோவாக பார்த்த ரசிகர்களுக்கு அவரை பெண் வேடத்தில் பார்ப்பது இதுவே முதல் தடவை எனக் கூறி வருகின்றனர்.

அப்புகைப்படத்தை பார்க்கும் போதே தெரிகிறது அவர் ஆணாக நடிப்பதில் மட்டுமல்லாது பெண்ணாக நடிப்பதிலும் கெட்டிக்காரன் என்று. இதை வைத்துப் பார்க்கும் போதே இவரை நடிகர் திலகம் என அழைப்பது ரொம்ப பொருத்தமாகத் தான் இருக்கின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement