சீரியல் ரசிகர்களின் மனதில் தனக்கான தனிப்பட்ட இடத்தை உருவாக்கிய ரச்சிதா மகாலட்சுமி, தற்போது திரைப்படங்களிலும் தனது திறமையைக் காட்டி வருகிறார். முன்னணி தமிழ் சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான இவர், சமீபத்தில் தனது புதிய படத்திற்கான ஷூட்டிங் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளார்.

ரச்சிதா மகாலட்சுமி முக்கிய சீரியல் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் அசைவற்ற இடத்தைப் பெற்றார். அவரது நடிப்பும் கவர்ச்சியும் ரசிகர்களை ஈர்த்தது. இதனை அடுத்து அவர் படங்களிலும் தனது கவனத்தை செலுத்தி வருகின்றார்.
இந்நிலையில், ரச்சிதா நடித்த முதலாவது படமான ‘Fire’ திரைப்படம் பிப்ரவரி 14, 2025 அன்று வெளியானது. காதல் மற்றும் சஸ்பென்ஸ் கலந்த கதையை கொண்ட இந்த படம், குறைந்த நேரத்தில் ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

அத்துடன், அப்படத்தினைப் பார்த்த ரசிகர்கள் ரச்சிதாவின் நடிப்பை பாராட்டி இருந்தனர். இந்நிலையில், ரச்சிதா தற்பொழுது தனது புதிய படத்தின் ஷூட்டிங் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களில் அவர் மிகவும் அழகா காணப்படுகின்றார். இதில் நடிகை லட்சுமி மேனனும் நடிக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!