• Jan 15 2025

அச்சு அசல் சமந்தாவாக மாறிய ‘சிறகடிக்க ஆசை’ மீனா.. இனி அடுத்து திரைப்படம் தான்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு ரீமேக் படமான ‘ஏ மாயா சேஸ்வே’ என்ற படத்தில் நடித்த சமந்தா போல் மாறிய ’சிறகடிக்க ஆசை’ மீனா கேரக்டரில் நடித்த கோமதி பிரியாவின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த 2010ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற திரைப்படம் தமிழில் சிம்பு, த்ரிஷா நடிப்பிலும் தெலுங்கில் நாக சைதன்யா, சமந்தா நடிப்பிலும் உருவானது என்பதும் இரு மொழிகளிலும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தான் நாக சைதன்யா மற்றும் சமந்தா இடையே காதல் உருவானதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் நடிக்கும் கோமதி பிரியா தனது சமூக வலைத்தளத்தில் ’விண்ணைத்தாண்டி வருவாயா’ தெலுங்கு ரீமேக் ஜெஸ்ஸி கேரக்டரில் நடித்த சமந்தா போலவே எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வரும் நிலையில் சமந்தா போல் இருக்கிறீர்கள் என்றும் இனி சமந்தாவின் இடத்தை பிடிக்க பிறகு திரை உலகிற்கு வாருங்கள் என்றும் அழைப்பு விடுத்து வருகின்றனர்.

மேலும் ’மாடன் வெர்ஷன் ஆப் மீனா’ என்றும் ’தேவதை போல் இருக்கிறீர்கள்’ என்றும் ’காலேஜ் ப்ரொபசர் மாதிரி இருக்கிறீர்கள்’ என்றும் பல கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது. ஒரு சிலர் இந்த கெட்டப் உங்களுக்கு நன்றாகவே இல்லை என்று நெகட்டிவ் கமெண்ட்ஸ்களையும் பதிவு செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement