• Jan 19 2025

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் முக்கிய அறிவிப்பு.. மே 28ஆம் தேதி களைகட்ட போகுது தமிழ்நாடு..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் வரும் மே 28ஆம் தேதி தமிழக முழுவதும் களைகட்ட போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார் என்பதும் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்று அறிவித்திருந்தார் என்பதும் தெரிந்தது. 

இந்த நிலையில் வரும் 28ஆம் தேதி உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுவதை அடுத்து அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள ஒருவர் கூட பட்டினியாக இருக்க கூடாது என்றும் தமிழக வெற்றிக்கழகத்தின் தொண்டர்கள் அன்றைய தினம் அன்னதானம் செய்ய வேண்டும் என்றும் தளபதி விஜய்யின் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும், அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி ,உலக பட்டினி தினமான வருகிற மே 28ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

மாவட்ட அணி, நகரம், ஒன்றியம், கிளை மற்றும் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் உரிய தேர்தல் வழிகாட்டும் விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி மக்கள் நல பணியில் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ 

இவ்வாறு புஸ்ஸி ஆனந்த் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement