• Oct 09 2024

எனக்கும் சிம்ரனுக்கும் இப்படி ஒரு உறவு... நான் இப்பவும் அவரிடம் பேசிட்டுத் தான் இருக்கேன்... அப்பாஸ் கூறிய உண்மை..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

'பூச்சூடவா' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அப்பாஸ். இவரின் முதல் படத்திலேயே நடிகை சிம்ரனுடன் இணைத்துப் பலவாறு கிசுகிசுக்கப்பட்டார். இதனையடுத்து அப்பாஸும், சிம்ரனும் தான் முதலில் திருமண பந்தத்தில் இணைந்து கொள்வார்கள் எனப் பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.


இருப்பினும் கொஞ்ச நாட்கள் சினிமாவில் நடித்து விட்டு பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என இருவரும் இருந்தார்கள். அந்தவகையில் இவர்கள் இருவரது நடிப்பிலும் விஐபி என்ற திரைப்படம் வெளியானது.


இதனைத் தொடர்ந்து சிம்ரனின் உடைய சினிமா பயணம் கொடிக்கட்டி பறக்க ஆரம்பித்தது. பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடிக்கத் தொடங்கினார். ஆனால் அப்பாஸ் தனது சினிமாப் பயணத்தில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே இருந்தார்.


பின்னர் சிறிது காலம் சென்றதும் இவர்களின் காதல் கதை மெதுவாக மறைந்து போனது. தற்போது இவர்கள் இருவரும் வேறு வேறு நபர்களை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் அப்பாஸ் சிம்ரன் குறித்துப் பேசியிருக்கின்றார்.அந்தவகையில் அவர் கூறுகையில் "சிம்ரன் எனக்கு நல்ல நண்பர், ஸ்கிரீனில் நாங்க இரண்டு பேரும் நல்ல ஜோடியாக தெரிந்தோம். இருந்தாலும் அதிக படம் பண்ணவில்லை. சிம்ரனுடன் தமிழில் ரெண்டு படம், தெலுங்கில் ஒரு படம் மட்டும் பண்ணேன். நல்ல கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடிக்கும், இப்ப கூட நான் சிம்ரனிடம் பேசி வருகிறேன்" என வெளிப்படையாக கூறியுள்ளார் அப்பாஸ்.

Advertisement