• Oct 16 2024

நடிகர் நரேஷின் 3-ஆவது மனைவியின் வழக்கை தள்ளுபடி செய்த கோர்ட்... கணவனின் வீட்டுக்கு செல்லத் தடை..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகராக மாறி இருப்பவர் தான் நரேஷ் பாபு . இவர் நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரர் ஆவார். ஏற்கனவே மூன்று திருமணங்கள் புரிந்த நிலையில் இவர் தற்போது தமிழில் கவுரவம், அயோக்யா, கூகுள் குட்டப்பா, வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கன்னட நடிகையான பவித்ரா லோகேசுடன் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்கிறார்.


இதனையடுத்து தன்னை விவாகரத்து செய்யாமல் நடிகை பவித்ராவுடன் நரேஷ் சேர்ந்து வாழ்வதாக 3-ஆவது மனைவி ரம்யா தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றார். இந்நிலையில் தனது தனிப்பட்ட சொந்த வாழ்க்கையை நரேஷ் 'மல்லி பெல்லி' என்ற பெயரில் சினிமா படமாக எடுத்து அதில் பவித்ரா லோகேசுடன் ஒன்றாக இணைந்து நடித்திருந்தார்.

தற்போது இந்த 'மல்லி பெல்லி' படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் ஓ.டி.டி தளத்தில் வெளியிட அனுமதிக்க கூடாது என்றும் கோரி நரேஷின் மூன்றாவது மனைவியாகிய ரம்யா பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் நரேஷ் மீது வழக்குத் தொடர்ந்தார். 


நரேஷ் மற்றும் ரம்யாஇருவரது நியாயங்களையும் கேட்ட நீதிபதி ரம்யாவின் வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கூறி உத்தரவிட்டுள்ளார். ஏனெனில் தணிக்கை குழு கற்பனை கதை என்று சான்றிதழ் அளித்து இருப்பதால் இப் படத்துக்கு தடை விதிக்க முடியாது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


அதுமட்டுமல்லாது மேலும் இன்னொரு வழக்கினை விசாரித்த கோர்ட் பல வருடங்களாக கணவனைப் பிரிந்து வாழும் ரம்யா ஐதராபாத் நானாக்கிராம் கூடா பகுதியில் உள்ள நரேஷ் வீட்டுக்கு செல்லக்கூடாது என தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement