• Sep 29 2024

ஹாலிவுட் செல்கிறது சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம்.. வெங்கட்பிரபுவின் வேற லெவல் திட்டம்..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் ஆங்கிலத்தில் டப் செய்யப்பட்டு ஹாலிவுட்டில் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘மாநாடு’. இந்த படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் குறிப்பாக டைம் லூப் கதையில் உருவாக்கப்பட்ட இந்த படம் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிம்புவுக்கு ஒரு சில திரைப்படங்கள் தொடர்ச்சியாக தோல்வியடைந்து கொண்டிருந்த நிலையில் இந்த படம் ஒரு கம்பேக் படமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏற்கனவே இந்த படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தை ஆங்கிலத்தில் டப் செய்து ஹாலிவுட்டில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிறது.

ஆங்கிலத்தில் டப் செய்யும் பணிகள் இன்னும் சில நாட்களில் தொடங்கும் என்றும் உலகம் முழுவதும் ஆங்கிலத்தில் இந்த படத்தை அடுத்த ஆண்டு வெளியிட  திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement