தமிழ் சினிமாவில் இயக்குநர் சு. அருண்குமாரின் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்த படம் தான் சித்தா.
இந்த திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது. தியேட்டரில் படம் பார்த்த எல்லோரும் எழுந்து நின்று கைதட்டி கூட ஆரவாரம் செய்துள்ளனராம்.
இப்படம் பெண் குழந்தைகள் பற்றிய கதையை எதார்த்தமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சித்தார்த்தே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ETAKI எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரித்து வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், தற்போது அனிமல் படத்தை மறைமுகமாக வெளுத்து வாங்கியுள்ளார் நடிகர் சித்தார்த்.

அதாவது, ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடித்த அனிமல் படத்தை பார்த்த அநேகமானோர் கழுவி ஊற்றினார்கள். ஆனாலும் அந்த படம் 1000 கோடி வரையில் வசூலில் சாதனை படைத்தது.
ஆனால், சமூகத்திற்கு நல்ல கருத்து சொன்ன சித்தா படம் வசூலில் வெற்றி பெறவில்லை. இதன் காரணமாகவே தற்போது நடிகர் சித்தார்த், ஒரு சில ஆண்களால் மிருகம் என்ற பெயர் வைத்த படத்தை பார்க்க முடிந்தது ஆனால் சித்தா படத்தை பார்க்க முடியவில்லை. அதற்கு காரணம் அவர்களுக்குள் இருக்கும் அசிங்கமும் குற்ற உணர்வும் தான் என குறிப்பிட்டுள்ளார்.
                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!