பாகிஸ்தானில் நடிக்கும் பல பிரபல நடிகர்கள் மற்றும் பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள், தற்போது இந்தியாவில் அணுகமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இது, சமீபத்தில் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், இந்திய அரசால் எடுத்த கடுமையான டிஜிட்டல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகின்றது.
இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் அதிர்ச்சியையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவான வீடியோக்கள், கருத்துக்கள் பரவுவது என்பது பாதுகாப்புக்கு எதிரானதாகவும், மக்கள் மனநிலையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகின்றது.
2025 ஏப்ரல் 26ம் திகதி காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் 26 பேர் பலியாகினர். இது பெண்கள், சிறுவர்கள், சுற்றுலாப் பயணிகள் என பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்கப்பட்ட சம்பவம். இதனால் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு உருவாகியது.
இந்த சூழ்நிலைக்கு பின், மத்திய அரசு எடுத்த தற்காலிக நடவடிக்கைகளில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சில பிரபலங்களின் சமூக வலைத்தளங்களும் குறி வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது பின் தொடர முடியாத வகையில் முடக்கப்பட்டுள்ள இன்ஸ்டாகிராம் கணக்குகளில் பாகிஸ்தானின் முன்னணி நடிகர்கள், நடிகைகள் மற்றும் சமூகத் தலைவர்களின் கணக்குகள் அடங்குகின்றன.
இன்றைய சமூக வலைத்தளக் காலத்தில், ஒரு பிரபலத்தின் கருத்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்களிடம் நேரடியாக செல்வதால், தேசிய பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியமாகின்றது. இந்த நோக்கத்தில் தான் இந்திய அரசு இந்தக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
Listen News!