சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, ஸ்ருதி மீனாவப் பாத்து உங்களால இண்டைக்கு எங்கட ரெஸ்டாரெண்டுக்கு நல்ல பேர் கிடைச்சிருக்கு என்று சொல்லி கொஞ்சக் காசு கொடுக்கிறார். மேலும் ஸ்ருதி மீனாட்ட நீங்க குக்கிங் பிஸ்னஸ் செய்தா ரொம்ப நல்லா முன்னேறுவீங்க என்று சொல்லுறார். அதைத் தொடர்ந்து ரவியும், ஆமா அண்ணி நீங்க டெகரேஷன் பிஸ்னஸ் மாதிரி இதையும் செய்தீங்க என்றால் பெரிய இடத்துக்கு போயிடுவீங்க என்கிறார்.
அதைக் கேட்ட மனோஜ் டேய் போதுமடா ரெண்டு வாழைப்பூ வடை சுட்டுக் கொடுத்தா பிஸ்னஸ்காரர் ஆகிடுவினமா என்று கேக்கிறார். மேலும் உங்களுக்கு பிஸ்னஸ் என்றால் என்னனு தெரியுமா என்று நக்கலாக கேக்கிறார். இதைக் கேட்ட விஜயா டேய் நீ இப்புடிப் பேசி என்ன ஆகப்போகுது நமக்கு வாச்சது சரியில்ல என்றால் எல்லாரும் வாய்க்கு வந்தபடி தான் கதைப்பாங்க என்று சொல்லுறார்.
அதனை அடுத்து அண்ணாமலை யாரையும் மட்டம் தட்டிக் கதைக்க வேணாம் என்கிறார். பின் மீனா முத்துவப் பாத்து பாவம் ரோகிணி தேவையில்லாம அத்த கிட்ட பேச்சு வாங்குறா என்று சொல்லுறார். இதைத் தொடர்ந்து மனோஜ் முத்துவப் பாத்து அம்மாக்கு இன்னும் ரோகிணி மேல இருக்கிற கோபம் குறையல என்ன செய்யுறது என்று தெரியாம இருக்கு என்கிறார்.
பின் ஸ்ருதி ரோகிணியப் பாத்து ஏன் நீங்க ஒரே அமைதியா இருக்கீங்க ஏதும் பிரச்சனையா என்று கேக்கிறார். அதுக்கு ரோகிணி கொஞ்ச நாளா என்ர வாழ்க்கை நோர்மலாவே இல்லையே அதுதான் இப்புடி இருக்கேன் என்கிறார். இதனை அடுத்து ஸ்ருதி ரோகிணிய விஜயா கூட சேர்த்து வைக்க ஐடியா ஒன்றைச் சொல்லுறார். பின் ரோகிணி இந்த ஐடியா நல்லா தான் இருக்கு ஆனா ஆன்டி கிட்ட மாட்டுப்படாமல் இருந்தாக் காணும் என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!