• Sep 20 2024

தம்பி கூட ஆடுகிற ஆட்டமா இது? ஷிவாங்கியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ஷிவாங்கி தனது தம்பியுடன் சேர்ந்த ஆடியுள்ள வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில், உடன் பிறந்த தம்பியுடன் இப்படியா ஆட்டம் போடுவது என நெட்டிசன்கள் அவரை கமெண்ட் பகுதியில் வச்சு செய்து செய்கின்றனர்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதலில் கோமாளி அதன் பிறகு குக்காகவும் கலந்து கொண்டவர் ஷிவாங்கி. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பாக சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ வடிவேலு நடித்த ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ ’காசேதான் கடவுளடா’ உட்பட சில படங்களில் .நடித்துள்ளார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் ஷிவாங்கி சுமார் 6 மில்லியன் ஃபாலோயர்கள் வைத்துள்ள நிலையில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவார். அந்த வகையில் முதல் முறையாக தனது உடன்பிறப்புடன் டான்ஸ் ஆடுவதாக கூறி ஒரு வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவில் அவரது ஆடையும் கிளாமராக உள்ளது.

கிளாமர் உடையில் தம்பியுடன் யாராவது இப்படி குத்தாட்டம் ஆடுவார்களா? என ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் வச்சு செய்கின்றனர். ஆனால் அதே நேரத்தில் ’உங்க தம்பி செம க்யூட், ஷிவாங்கி நீங்களும் அழகுதான் என்றும், உங்கள் தம்பி அழகாக இருக்கிறார் என்றும், அக்கா தம்பி டான்ஸ் சூப்பர் என்றும் பாசிட்டிவ் கமெண்ட்கள் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement