• Apr 26 2024

தனது குடும்பத்துடன் தீபாவாளியை கோலாகலமாக கொண்டாடிய சாந்தனு மற்றும் கிக்கிவிஜய்..

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

சாந்தனு பாக்யராஜ் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் 1998ஆம் ஆண்டு வெளியான வேட்டிய மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதுமட்டுமல்லாமல் இவர் இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜின் மகன் மற்றும் நடிகை சரண்யா பாக்யராஜின் தம்பியும் ஆவார். 


மேலும் இவர் 2008ஆம் ஆண்டு வெளியான சக்கரக்கட்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.  அதை தொடர்ந்து ஆயிரம் விளக்கு, கண்டேன், அம்மாவின் கைப்பேசி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். மேலும் சாந்தனு சென்னை, தமிழ்நாட்டில் பிறந்தவர் ஆவார்.


இதன்பின், சில திரைப்படங்களில் வெற்றிகண்ட சாந்தனு, சில திரைப்படங்களில் தோல்வியும் சந்தித்து வந்தார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் முருங்கைக்காய் சிப்ஸ் எனும் திரைப்படம் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றது.


இதனை தொடர்ந்து தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சாந்தனு தொகுப்பாளினி கீர்த்தி என்பவரை 2015ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் தீபாவாளியை கோலாகலமாக கொண்டாடி புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் சாந்தனு.


Advertisement

Advertisement

Advertisement