கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் திருப்திகரமாக இல்லை என்று கூறப்படுகிறது.
ரூ.300 கோடிக்கும் அதிகமாக பட்ஜெட் செலவு செய்து தயாரிக்கப்பட்ட இந்த படம் 100 கோடி வசூலை கூட இன்னும் தாண்டாமல் இருப்பதே தயாரிப்பு தரப்புக்கு ஒரு பக்கம் அதிர்ச்சியாக இருக்கும் நிலையில் ஷங்கரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
’இந்தியன் 2 ’ படத்தின் தோல்வி ஆரம்பமாக ’இந்தியன் 3 ’ படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் முன்வருவார்களா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அதேபோல் ’கேம் சேஞ்சர்’ திரைப்படத்தின் வியாபாரமும் பெரிய அளவில் இருக்காது என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி ’வேள்பாரி’ என்ற ஷங்கரின் கனவு படம் கூட கேள்விக்குறியாகி உள்ளதாக தெரிகிறது. இந்த படத்தை மூன்று பாகங்களை ஷங்கர் இயக்க திட்டமிட்டு இருந்ததாகவும் 1000 கோடி ரூபாய் பட்ஜெட் என்றும் கூறப்பட்ட நிலையில் ஷங்கரை நம்பி இனி இந்த படத்தை தயாரிக்க இருந்த தயாரிப்பாளர் ரூ.1000 கோடி முதலீடு செய்வாரா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
மொத்தத்தில் ஒரே ஒரு படம் ஷங்கரின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றி விட்டதாக கோலிவுட் திரையுலகில் கூறப்பட்டு வருகிறது. ஆனால் இந்த விமர்சனங்களை எல்லாம் உடைத்து ஷங்கர் மீண்டும் தான் ஒரு வெற்றிகரமான இயக்குனர் என்பதை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!