• Dec 06 2024

பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீரியல் நடிகை.! பலரும் பதறும் வீடியோ

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே, பாண்டியன் ஸ்டோர் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலம் ஆனவன் தான் சாய் காயத்ரி. இவர் தான் எடுத்துக் கொள்ளும் சீரியலின் கேரக்டர் பாசிட்டிவாக இருக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார். தான் நடிக்கும் கேரக்டரில் ஏதும் மாற்றத்தை இயக்குனர் கொண்டு வந்தால் உடனே அதிலிருந்து விலகி விடுவாராம்.

அவ்வாறுதான் பாண்டியன் ஸ்டோர் முதலாவது பாகத்தில் நடிக்கும் போது சீரியலில் இருந்து விலகி உள்ளார். அதன்பின் நீ நான் காதல் சீரியலில் நடித்தார். எனினும் இரண்டு மாதங்களுக்கு முன் தனது உடல் நலனை கருத்தில் கொண்டு அதில் இருந்து விலகுவதாகவும் அதிர்ச்சி கொடுத்திருந்தார்.

d_i_a

கடந்த ஆண்டு சாய் சீக்ரெட்ஸ் என்ற அழகு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கினார். இவரிடம் 20க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றார்கள். தன்னுடைய பொருட்களை பிரபலப்படுத்தும் விதமாக தன்னுடைய பொருட்கள் பற்றியும் அதன் தனித்தன்மை பற்றியும் விளக்கி வீடியோ போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.


குறித்த நிறுவனத்தின் மூலம் இயற்கையாக தயாரிக்கப்படும் ஹேர் ஆயில், நலங்கு மாவு, சோப் என 8 உற்பத்திகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றார். அதற்காக பிரத்தியேக மிஷின்களையும் வைத்துள்ளார்.


இந்த நிலையில், மிஷினில் கை சிக்கி பரிதாபமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றார் சாய் காயத்ரி. இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் புகைப்படத்தை வீடியோவோடு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட பதிவில், தனக்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது எனவும் பொருட்கள் தயாரிப்பின் போது இயந்திரத்தால் காயம் ஏற்பட்டது. இன்னும் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களில் எல்லா சமூக பக்கங்களிலும் ஆக்டிவாக இருப்பேன் என தெரிவித்திருந்தார். தற்போது சாய் காயத்ரி நலமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement