• May 19 2026

இவ்வளவு கடன் இருப்பதே தெரியாதா? முதலமைச்சரையே உலுக்கிய சீமான்..

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழக அரசியல் களம் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் சூடுபிடித்துக் கொண்டே இருக்கிறது. தமிழக தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சியை அமைத்துள்ள நிலையில், கட்சித் தலைவரான விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். 

அதே நேரத்தில், இந்தத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி சுமார் 4 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.


இந்த சூழலில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார். “தமிழகத்திற்கு ரூ.10 லட்சம் கோடி கடன் இருப்பது கூட தெரியாமல் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டீர்களா?” என்று கேள்வி எழுப்பிய அவர், மாநிலத்தின் நிதிநிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஏற்கனவே தமிழகத்தின் கடன் சுமை அதிகமாக இருப்பதால் தான் இலவச திட்டங்களை வழங்க முடியாது என்று நான் தொடர்ந்து கூறி வந்தேன். ஆனால் மக்கள் மனதில் பிடிக்கும் வகையில் வாக்குறுதிகள் வழங்குவது எளிது; அதை நடைமுறைப்படுத்துவது தான் சவால்.” என்றும் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

சீமானின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு தவெக ஆதரவாளர்களும், நாதக ஆதரவாளர்களும் மாறி மாறி கருத்து தெரிவித்து வருவதால் அரசியல் சூழல் மேலும் பரபரப்பாகியுள்ளது.

Advertisement

Advertisement