• Jul 05 2026

ரோகிணி போட்ட ரகசிய ஆட்டம்? மனோஜின் பதிலை கேட்டு ஷாக்கான விஜயா எடுத்த அதிரடி முடிவு

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், விஜயாவுக்கு வக்கீல் கால் பண்ணி மனோஜின் விவாகரத்து வழக்கை பற்றி பேசுகின்றார். மேலும், உங்களுடைய மகன் மீண்டும் ரோகிணியுடன் இணைவது போல் உள்ளது, அவர்கள் இணைந்தால் எனக்கு பிரச்சனை இல்லை, ஆனால் என்னுடைய மானத்தை வாங்க வேண்டாம் என்று கூறுகின்றார். இதனால் மனோஜின் ஷோரூமில் என்னதான் நடக்கிறது என்பதை பார்ப்பதற்காக விஜயா அங்கு செல்கின்றார்.

அதே நேரத்தில் முத்துவும் மீனாவும் பைனான்சியர் ஆபீசுக்கு தன்னுடைய நண்பருடன் செல்லுகின்றனர். அங்கு முத்துவின் நண்பர் பைனான்சியரின் கணக்கு வழக்குகளை பற்றி கேள்வி எழுப்புகின்றார். மேலும் முத்துவின் வீட்டு பத்திரப் பற்றியும் விசாரிக்கின்றார். இப்போது இது பற்றி உண்மை சொல்லவில்லை என்றால் நான் என்னுடைய டியூட்டியை செய்ய வேண்டி வரும் என விரட்டுகின்றார்.

இதனால் பயப்பட்ட பைனான்சியர், அந்த காசை நான் வழங்கவில்லை, சிந்தாமணி தான் முத்து விஜயாவுக்கு வழங்கினார். அவர்களுடைய வீட்டு பத்திரம் கூட சிந்தாமணி இடம் தான் இருக்கின்றது என எல்லா உண்மையும் போட்டு உடைக்கின்றார்.


மேலும் அந்த நேரத்தில் சிந்தாமணிக்கு கால் பண்ணி விஜயாவின் வீட்டு பத்திரத்தை மீண்டும் கொடுக்குமாறு கூற, அவர் முடியாது. இதற்கு பின்பு நானே பார்த்துக்கொள்கிறேன். என்னுடைய கணக்கு வழக்கு எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றது என்று சொல்லிவிட்டு போனை கட் பண்ணி விடுகின்றார். இதனால் சிந்தாமணியை வேறு வழியில் தான் மடக்க வேண்டும் என பிளான் பண்ணுகிறார்கள்.

இன்னொரு பக்கம் மனோஜின் ஸ்டோர் ரூமுக்கு சென்ற விஜயா, இங்கு யாரெல்லாம் வந்து போகின்றார்கள் என்று மனோஜை கண்டபடி திட்டுகின்றார். ஆனாலும் மனோஜ், ஷோரூமில் எலி இருக்கின்றது அதனை பிடிப்பதற்காக ரோகிணி பூனை கொண்டு வந்து விட்டார் என கதை விடுகின்றார்.

இதைக் கேட்ட விஜயா, என்ன லூசு மாதிரி பேசுற? என்று திட்டுகின்றார். அத்துடன் இங்கு நடப்பவற்றை நான் கண்காணிக்க வேண்டும் என்று சொன்னதும் ஜீவா சிசிடிவி கேமராவில் வீட்டில் இருந்து கண்காணிக்கலாம் என ஐடியா கொடுக்கின்றார். இதனால் மனோஜ் என்ன செய்வது என்று தெரியாமல் உறைந்து நிற்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement