பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது தனிமை குறித்து சமூக வலைத்தளங்களில் பரவிய தவறான செய்திகளுக்கு சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, “எனக்கு இவ்வளவு பெரிய குடும்பமும், நண்பர்களும், ரசிகர்களின் அன்பும் இருக்கும் போது நான் எப்படி தனியாக இருக்க முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தனக்கு சில நேரங்களில் “Me Time” எனப்படும் தனிப்பட்ட நேரம் தேவைப்படுவது மட்டுமே காரணம் என்றும், அதையே சிலர் தவறாக புரிந்து கொண்டு பெரிய பிரேக்கிங் நியூஸ் போல பரப்பிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த செய்திகளை பார்த்து தனது தாயார் கூட “என்ன நடந்தது?” என்று பதற்றமாக கேட்க ஆரம்பித்துவிட்டார் எனவும் அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் தேவையற்ற வதந்திகள் வேகமாக பரவுவது குறித்து கவலை தெரிவித்த சல்மான் கான், ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் உண்மையை சரிபார்க்காமல் செய்திகளை பரப்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். “சில நேரம் நான் தனியாக இருக்கிறேன் என்றால் அது மனஅழுத்தம் அல்லது பிரச்சனை அல்ல; அது சாதாரண ஓய்வு நேரம் தான்.” என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த விளக்கம் வெளியானதும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பலர் “அவசியமில்லாத வதந்திகளை நம்ப வேண்டாம்.” எனவும் கருத்து பதிவு செய்து வருகின்றனர். தற்போது இந்த விவகாரம் இணையத்தில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.
Listen News!