சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், சிந்தாமணியை பார்த்த முத்துவும் மீனாவும், பைனான்சியர் எல்லா உண்மையும் சொல்லிவிட்டார். எதற்காக இப்படி பண்ணினா? அம்மாவுடன் உறவாடி இப்படி குடும்பத்தையே நடுரோட்டில் நிறுத்திட்டியே என பேசுகின்றனர்.
மேலும் தங்களுடைய வீட்டை திருப்பித் தருமாறு கேட்க, அதற்கு சிந்தாமணி கண்டிஷன் போடுகின்றார். அதில் மீனா சங்கத் தலைவி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறுகின்றார்.
அப்படி செய்தால் தான் உன்னுடைய மாமனார் மாமியார் வீட்டில் நிம்மதியாக இருப்பார்கள், மீண்டும் வீட்டை உங்களிடமே தருகின்றேன் என்று கூறுகின்றார். இதை நம்பி மீனாவும் யோசிக்கத் தொடங்குகின்றார்.
இதைத்தொடர்ந்து வீட்டுக்கு வந்த முத்து, சிந்தாமணியை சந்தித்த விஷயத்தையும், சிந்தாமணி தான் எல்லாத்துக்கும் முதல் காரணம், அவர் அம்மாவுடன் வேண்டுமென்றே நட்பாக பழகி குருவுக்கு துரோகம் பண்ணிவிட்டார் என்று எல்லா உண்மையையும் புட்டு புட்டு வைக்கின்றனர்.

இதை கேட்டு விஜயா அதிர்ச்சி அடைகின்றார். அந்த நேரத்தில் அண்ணாமலையும், “இப்ப சரி நல்லவங்க யாரு கெட்டவங்க யாரு என்று புரிந்து கொள்ளு, நான் அவளுடன் பழகும் போதே சொன்னேன், அவருடன் சேராதே என்று. ஆனால் நீ கேட்கவில்லை. இப்போது எங்களுடைய நிலைமையை பார்த்தியா?” என பேசுகின்றார்.
இறுதியில் சிந்தாமணி போட்ட கண்டிஷனை பற்றி மொட்ட மாடியில் நின்று மீனா தனியாக யோசித்துக் கொண்டிருக்கின்றார். இதன் போது அங்கு வந்த முத்துவிடம், “நான் சங்கத் தலைவி பதவியை ராஜினாமா செய்கின்றேன். மாமாவும் மாமியும் இங்கே இருந்து கஷ்டப்படுகிறார்கள்” என்று சொல்லுகிறார்.
இதைக் கேட்ட முத்து, “இப்போ உனக்கு இருக்கிற ஒரே ஆயுதம் அந்த பதவிதான். அந்த பதவியை ராஜினாமா செய்தால் சிந்தாமணியின் ஆட்டம் இன்னும் அதிகமாகிவிடும். உன்னை நம்பி பல பூக்கார வியாபாரிகள் அவரை எதிர்த்து உன்னை வெற்றி பெற செய்துள்ளார்கள். அதனால் இப்படியான யோசனை விட்டு விடு” என்று கூறுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!