• May 19 2026

கவர்ச்சி உடையில் கவனித்த ஆண்கள்… இன்று என்னை எப்படி பார்க்கிறார்கள் தெரியுமா.? நடிகை பகீர்

shali / 1 hour ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை மும்தாஜ் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், சினிமா துறையில் நடிகைகள் சந்திக்கும் மறைமுக அழுத்தங்கள் மற்றும் ஒடுக்குமுறைகள் குறித்து அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.


நடிகையாக இருந்த காலத்தில், தனது வாழ்க்கையும் கேரியரும் முழுமையாக இயக்குநர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, படப்பிடிப்பிற்காக காட்டப்படும் உடைகள் ஆரம்பத்தில் ஒரு மாதிரியாக இருந்தாலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் அவை இன்னும் கவர்ச்சியாக மாற்றப்பட்டிருக்கும் என கூறியுள்ளார். இதுகுறித்து கேள்வி எழுப்பினால், “இயக்குநர் தான் இப்படிச் சொல்லியுள்ளார்” என்று பதில் கிடைக்கும் என்றும் அவர் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

மேலும், “நான் ஒரு நடிகை என்பதால், இயக்குநர் சொல்வதையே கேட்க வேண்டிய சூழல் இருந்தது. அதுதான் உண்மையான ஒடுக்குமுறை” என்று மனம் திறந்துள்ளார். 

தற்போது அபாயா அணிந்து வெளியில் செல்லும் போது, முன்பு கவர்ச்சி உடையில் இருந்தபோது ஆண்கள் பார்த்த பார்வைக்கும், இப்போது கிடைக்கும் மரியாதையான பார்வைக்கும் உள்ள வித்தியாசத்தை தெளிவாக உணர முடிகிறது என்றும் கூறியுள்ளார். மும்தாஜின் இந்த வெளிப்படையான கருத்துகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement