தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனரும், நடிகருமான கே. ராஜன் சமீபத்தில் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதிலும் 85 வயதான கே. ராஜன் மனவிரக்தியில் ஆற்றில் குதித்து உயிரிழந்த சம்பவம் பல சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது.
இந்த நிலையில், கே. ராஜன் உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் பயில்வான் ரங்கநாதன் பேட்டி கொடுத்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில், கே. ராஜன் கொரோனா காலத்தில் இருந்தே குடும்பத்திலிருந்து விலகி ஹோட்டலில் பல ஆண்டுகளாக தங்கி இருந்தார். அவருக்கும் எனக்கும் ஒரு நிகழ்ச்சியில் சண்டை நடந்தது. அப்போது இது பற்றி பேசினேன்.
அதன் பின்பு அவர் என்னிடம் பேசினார். நாங்கள் இருவரும் பேசி சமாதானமாகிவிட்டோம். அப்போது, “வீட்டில் சண்டை போட்டுட்டு ஹோட்டலில் தங்கி இருக்கீங்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “என் பசங்க ஒருத்தன் வந்து என்னோட படுத்திடுவான். வீட்டிலிருந்து தான் சாப்பாடு வருகிறது” என்று சொன்னார்.

மேலும், அவருடைய உயிரிழப்புக்கு காரணம் கடன் பிரச்சனை என்று வரும் தகவலில் எந்தவித உண்மையும் இல்லை. அவர் கடனில் சிக்கக்கூடியவர் இல்லை. அவர்தான் பலருக்கும் பணம் கொடுத்துள்ளார். கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் வரை படம் கொடுத்து இருக்கின்றார். சமீபத்தில் அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
ஆனால், காரில் சென்று கொண்டிருந்தபோது அந்த அடையார் பகுதியில் காரை நிறுத்தச் சொல்லி, “அங்கிருந்து வாக்கிங் போகின்றேன்” என்று கூறிவிட்டு திடீரென ஆற்றில் குதித்துள்ளார். அதன் பின்பு டிரைவர் கத்தி அனைவரையும் அழைத்து, இரண்டு மணி நேரப் போராட்டத்திற்கு பின்புதான் அவருடைய உடலை மீட்டுள்ளனர்.
அவருடைய குடும்பத்தில் பிரச்சினைகள் வர வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
Listen News!