• May 19 2026

100 கோடி கூட கடக்காதுன்னு சொன்ன படம்.. 4ம் நாள் பாக்ஸ் ஆபிஸை தலைகீழாக்கிய சூர்யா!

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியான கருப்பு திரைப்படம் தற்போது உலகளவில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.  சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்துள்ள இந்த படம், புராணக் கதையம்சம் கொண்டதாக காணப்படுகிறது.

மேலும், ஊழல் நிறைந்த சட்ட அமைப்பால் பாதிக்கப்படும் ஒரு தந்தை மற்றும் மகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. இதில் சூர்யா, கருப்பசாமியின் மனித அவதாரமாக மாறும் வழக்கறிஞர் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், கருப்பு படத்தின் திங்கட்கிழமை வசூல் விபரமும் வெளியாகியுள்ளது. வழக்கமாக வேலைநாள்களில் பல படங்களின் வசூல் குறைவது இயல்பான விஷயம். அதேபோல் ‘கருப்பு’ படத்திற்கும் சிறிய சரிவு ஏற்பட்டிருந்தாலும், இன்னும் வலுவான வசூலைப் பதிவு செய்துள்ளது.


அதன்படி, இந்த படம் இந்தியாவில் மட்டும் நான்காவது நாளில் சுமார் 14.30 கோடியை வசூலித்துள்ளது.  இதில் தமிழ் பதிப்பு 12.10 கோடியும், தெலுங்கு பதிப்பு 2.20 கோடியும் வசூலித்துள்ளது.

இதன் மூலம், இந்திய அளவில் படத்தின் மொத்த கிராஸ் வசூல் 95.30 கோடியை எட்டியுள்ளது. இந்திய நெட் வசூல் 82.30 கோடியாக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளிலும் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நான்காவது நாளில் மட்டும் ஓவர்சீஸ் மார்க்கெட்டில் 4 கோடி வசூல் செய்துள்ள நிலையில், அங்குள்ள மொத்த வசூல் 46 கோடியாக உயர்ந்துள்ளது.

இதனால், உலகளவில் ‘கருப்பு’ திரைப்படத்தின் மொத்த வசூல் தற்போது 141.30 கோடியை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் நான்கு நாட்களிலேயே இந்த அளவுக்கு வசூல் சாதனை படைத்திருப்பது, சூர்யாவின் சமீபத்திய கம்பேக் படமாக ‘கருப்பு’ மாறியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் பேசுகின்றன.


Advertisement

Advertisement